TANUVAS Recruitment 2026
TANUVAS Recruitment 2026

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலையில் 60 பணியிட வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க – TANUVAS Recruitment 2026

TANUVAS Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) தனது கட்டுப்பாட்டில் இயங்கும் கிருஷி விஞ்ஞான் கேந்திரா (KVK) மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TANUVAS Recruitment 2026
TANUVAS Recruitment 2026

10 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் மொத்தம் 60 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நல்ல சம்பளம் மற்றும் நிரந்தரப் பணி என்பதால் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

கருடா TNPSC Academy Group 2 & 4 Online Class New Batch தொடங்க உள்ளது. வகுப்பில் இணைய தொடர்புக்கு - 9787968176

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

பணியிட விவரங்கள் மற்றும் பதவிகள்

மொத்தம் 60 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் உயர் பதவியான சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட் (Subject Matter Specialist) பணிக்கு 24 இடங்களும், ப்ரோகிராம் அசிஸ்டென்ட் (Programme Assistant) பணிக்கு 16 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர பண்ணை மேலாளர் (Farm Manager), உதவியாளர் (Assistant), சுருக்கெழுத்தர் (Stenographer Grade III), ஓட்டுநர் (Driver) மற்றும் திறன்மிகு உதவியாளர் (Skilled Support Staff) எனப் பலதரப்பட்ட பதவிகள் உள்ளன. அலுவலகப் பணி முதல் களப்பணி வரை அனைத்து விதமான வேலைகளும் இதில் அடங்கும்.

கல்வித் தகுதி விவரங்கள்

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட் பணிக்குச் சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் (Master’s Degree) பெற்றிருக்க வேண்டும். ப்ரோகிராம் அசிஸ்டென்ட், பண்ணை மேலாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) முடித்திருக்க வேண்டும்.

சுருக்கெழுத்தர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியும், ஓட்டுநர் மற்றும் திறன்மிகு உதவியாளர் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ (ITI) முடித்திருந்தாலே போதுமானது. ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு மற்றும் சம்பளம்

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 32 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. சம்பளத்தைப் பொறுத்தவரை சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு மாதம் 56,100 ரூபாய் முதல் 1,77,500 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும்.

உதவியாளர் மற்றும் பண்ணை மேலாளர் பணிகளுக்கு 35,400 ரூபாய் முதல் 1,12,400 ரூபாய் வரையும், ஓட்டுநர் பணிக்கு 21,700 ரூபாய் முதல் 69,100 ரூபாய் வரையும் சம்பளம் கிடைக்கும். அடிப்படை ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் 18,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை

விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப் பிரிவினர் 500 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 250 ரூபாய் செலுத்தினால் போதும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்குத் திறன் தேர்வு (Skill Test) தனியாக நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் முகவரி

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் டனுவாஸ் (TANUVAS) இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைத்து, உரிய விண்ணப்பக் கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட் (DD) எடுத்துத் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Director of Extension Education, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Skill Development Centre Building, Madhavaram Milk Colony, Chennai – 600 051.

TANUVAS Recruitment 2026
TANUVAS Recruitment 2026

விண்ணப்ப உறையின் மீது நீங்கள் எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் (Application for the post of in ICAR funded KVK). விண்ணப்பங்கள் போய்ச் சேர வேண்டிய கடைசி நாள் 12.01.2026 மாலை 5 மணி ஆகும். கடைசி தேதி நெருங்குவதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification: 

Apply Link:

For More Job Info:

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *