CBSE Junior Assistant Recruitment 2025
CBSE Junior Assistant Recruitment 2025

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜூனியர் அசிஸ்டன்ட் வேலைவாய்ப்பு! விரைந்து விண்ணப்பிக்க – CBSE Junior Assistant Recruitment 2025

CBSE Junior Assistant Recruitment 2025: மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிக்கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE) அமைப்பில் இருந்து வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

CBSE Junior Assistant Recruitment 2025
CBSE Junior Assistant Recruitment 2025

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நாடு முழுவதும் உள்ள தனது அலுவலகங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கருடா TNPSC Academy Group 2 & 4 Online Class New Batch தொடங்க உள்ளது. வகுப்பில் இணைய தொடர்புக்கு - 9787968176

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

குறிப்பாக 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஜூனியர் அசிஸ்டென்ட் போன்ற அலுவலகப் பணிகள் அறிவிக்கப்பட்டிருப்பது வேலை தேடுபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்புகள்

இந்த அறிவிப்பில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது ஜூனியர் அசிஸ்டென்ட் (Junior Assistant) மற்றும் ஜூனியர் அக்கவுண்டன்ட் (Junior Accountant) பணியிடங்களாகும். ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு மொத்தம் 35 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. அத்துடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளோ அல்லது இந்தியில் 30 வார்த்தைகளோ தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல் ஜூனியர் அக்கவுண்டன்ட் பணிக்கு 16 இடங்கள் உள்ளன. இதற்கும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது ஆனால் கணக்குப்பதிவியல் அல்லது வணிகவியல் போன்ற பாடங்களை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். இந்த இரண்டு பதவிகளுக்கும் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரிகளுக்கான உயர் பதவிகள்

டிகிரி மற்றும் முதுகலை பட்டம் முடித்தவர்களுக்கு உயர் சம்பளத்துடன் கூடிய அதிகாரி நிலை பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சூப்பிரண்டு (Superintendent) பணிக்கு 27 இடங்கள் உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

அசிஸ்டென்ட் செக்ரட்டரி, அக்கவுண்ட்ஸ் ஆபீசர் மற்றும் அசிஸ்டென்ட் டைரக்டர் போன்ற உயர் பதவிகளுக்கு அந்தந்தத் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கு மிக உயர்ந்த சம்பளம் வழங்கப்படும்.

சம்பளம் மற்றும் இதர சலுகைகள்

சிபிஎஸ்இ என்பது மத்திய அரசு நிறுவனம் என்பதால் இங்கு பணிபுரிபவர்களுக்கு மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவின் படி மிகச்சிறந்த சம்பளம் வழங்கப்படும். ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் அக்கவுண்டன்ட் பணிகளுக்கு அடிப்படை சம்பளமாக மாதம் 19,900 ரூபாய் முதல் 63,200 ரூபாய் வரை வழங்கப்படும்.

சூப்பிரண்டு மற்றும் ஜூனியர் டிரான்ஸ்லேஷன் ஆபீசர் பணிகளுக்கு மாதம் 35,400 ரூபாய் முதல் 1,12,400 ரூபாய் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரி பணியிடங்களுக்கு மாதம் 56,100 ரூபாய் முதல் 1,77,500 ரூபாய் வரை சம்பளம் மற்றும் இதர மத்திய அரசு சலுகைகள் கிடைக்கும்.

தேர்வு முறை விவரங்கள்

விண்ணப்பதாரர்கள் மூன்று கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் டயர் 1 எனப்படும் முதல்நிலைத் தேர்வு நடைபெறும். இது அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளைக் கொண்டதாக இருக்கும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு டயர் 2 எனப்படும் முதன்மைத் தேர்வு நடைபெறும். இது எழுத்துத் தேர்வு வடிவில் இருக்கும். ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்குத் தட்டச்சுத் தேர்வு நடைபெறும். உயர் பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் சலுகைகள்

குரூப் ஏ பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினர் 1500 ரூபாயும், குரூப் பி மற்றும் சி பதவிகளுக்கு 1050 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இருப்பினும் பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் வெறும் 250 ரூபாய் மட்டுமே. எனவே பெண்கள் இந்த வாய்ப்பை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சிபிஎஸ்இ இணையதளமான cbse.gov.in என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கத் தொடங்கிய நாள் 02.12.2025 ஆகும்.

CBSE Junior Assistant Recruitment 2025
CBSE Junior Assistant Recruitment 2025

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 22.12.2025. கால அவகாசம் குறைவாக இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு வேலையை லட்சியமாகக் கொண்டவர்கள் இந்தத் தேர்வுக்குத் தயாராகுங்கள்.

Official Notification: 

Apply Link:

For More Job Info:

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *