India Post GDS Recruitment 2026
India Post GDS Recruitment 2026

அஞ்சல் துறையில் 10th முடித்தவர்களுக்கு 30000 காலிப்பணியிடங்கள்! அறிவிப்பு வெளியாகும் தேதி இதோ – India Post GDS Recruitment 2026

India Post GDS Recruitment 2026: மத்திய அரசு வேலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 10-ம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு மிகப் பெரிய மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்திய அஞ்சல் துறையில் (India Post) காலியாக உள்ள கிராமின் டாக் சேவக் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

India Post GDS Recruitment 2026
India Post GDS Recruitment 2026

நாடு முழுவதும் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வேலைவாய்ப்பிற்கு எந்தவிதமான எழுத்துத் தேர்வும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த முழுமையான விவரங்களை இங்கே காண்போம்.

கருடா TNPSC Academy Group 2 & 4 Online Class New Batch தொடங்க உள்ளது. வகுப்பில் இணைய தொடர்புக்கு - 9787968176

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

பணியிட விவரங்கள் மற்றும் முக்கிய அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வேலைவாய்ப்புகளில் ஒன்று கிராம அஞ்சல் பணியாளர் (Gramin Dak Sevak – GDS) பணியாகும். இதில் கிளை அஞ்சல் அதிகாரி (Branch Post Master – BPM) மற்றும் உதவி கிளை அஞ்சல் அதிகாரி (Assistant Branch Post Master – ABPM) ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 2026 ஜனவரி 15-ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்புள்ளது.

கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள்

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கக் கல்வித் தகுதி மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி (SSLC / Matriculation) பெற்றிருந்தாலே போதுமானது. கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியை ஒரு பாடமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதாரணமாகத் தமிழ்நாட்டில் விண்ணப்பிப்பவர்களுக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர விண்ணப்பதாரர்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தற்போது இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்.

வயது வரம்பு விவரங்கள்

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி மற்றும் எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.

தேர்வு முறை மற்றும் சம்பளம்

இந்த வேலைவாய்ப்பின் மிகச் சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கு எந்தவிதமான எழுத்துத் தேர்வும் கிடையாது. விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் (Merit List) தயார் செய்யப்பட்டுத் தேர்வு செய்யப்படுவார்கள்.

யாருக்கு அதிக மதிப்பெண் உள்ளதோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பிபிஎம் (BPM) பதவிக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரையும், ஏபிபிஎம் (ABPM) பதவிக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரையும் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் 100 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் முற்றிலும் கிடையாது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

India Post GDS Recruitment 2026
India Post GDS Recruitment 2026

ஜனவரி 15-ம் தேதி அறிவிப்பு வெளியானவுடன் விண்ணப்பப் பதிவு தொடங்கும். எனவே 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்துவிட்டு அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்கள் தங்களது சான்றிதழ்களைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஊரிலேயே மத்திய அரசு வேலை பெறுவதற்கான இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

For More Job Info:

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *