DHS Multi Purpose Worker Recruitment 2025: கரூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) தற்காலிக அடிப்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் பலதரப்பட்ட வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மருத்துவமனைகளில் உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பு தகுதியே போதுமானது.
| கருடா TNPSC Academy Group 2 & 4 Online Class New Batch தொடங்க உள்ளது. வகுப்பில் இணைய தொடர்புக்கு - 9787968176 |
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
பணியிட விவரங்கள் மற்றும் முக்கியத்துவம்
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் அதிகபட்சமாக மல்டி பர்பஸ் ஹாஸ்பிடல் வொர்க்கர் (Multi Purpose Hospital Worker) பணிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ரேடியோகிராபர், பிசியோதெரபிஸ்ட், லேப் டெக்னீசியன், ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் கவுன்சிலர் போன்ற பல்வேறு தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. சொந்த மாவட்டத்திலேயே பணிபுரிய விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு
மல்டி பர்பஸ் ஹாஸ்பிடல் வொர்க்கர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் கணினிப் பயிற்சியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
மற்ற தொழில்நுட்பப் பணிகளுக்கு அந்தந்தத் துறையில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு பதவியைப் பொறுத்து மாறுபடும். உதவியாளர் பணிக்கு 40 வயது வரையும், ஆயுஷ் பிரிவு உதவியாளர் பணிக்கு 59 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் மற்றும் தேர்வு முறை
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்குத் தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். மல்டி பர்பஸ் ஹாஸ்பிடல் வொர்க்கர் பணிக்கு மாதம் 8,500 ரூபாயும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் ரேடியோகிராபர் பணிகளுக்கு மாதம் 13,500 ரூபாயும் வழங்கப்படும்.
உயர் தொழில்நுட்பப் பணிகளுக்கு 23,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். இந்த வேலைவாய்ப்பிற்கு எந்தவிதமான எழுத்துத் தேர்வும் கிடையாது. தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முகவரி
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கரூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான karur.nic.in என்ற முகவரியில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி நிர்வாகச் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் மாவட்டம், கரூர் – 639 007.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி 27.12.2025. இன்னும் சில நாட்களே கால அவகாசம் உள்ளது. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Official Notification:
Apply Link:
For More Job Info:





