DHS Thirunelveli Recruitment 2025
DHS Thirunelveli Recruitment 2025

சுகாதாரத்துறையில் பல்வேறு பணியிட வேலை! 8வது படித்தால் போதும் – DHS Thirunelveli Recruitment 2025

DHS Thirunelveli Recruitment 2025: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DHS Thirunelveli Recruitment 2025
DHS Thirunelveli Recruitment 2025

மருத்துவம் சார்ந்த படிப்புகள், டிகிரி முடித்தவர்கள் மற்றும் வெறும் 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைக்கு எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது என்பது கூடுதல் சிறப்பு.

கருடா TNPSC Academy Group 2 & 4 Online Class New Batch தொடங்க உள்ளது. வகுப்பில் இணைய தொடர்புக்கு - 9787968176

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

பணியிட விவரங்கள் மற்றும் முக்கியத்துவம்

திருநெல்வேலி மாவட்டத்தில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. மொத்தம் ஆறு விதமான பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் உயர் பதவியான குவாலிட்டி மேனேஜர் பணிக்கு ஒரு இடமும், சீனியர் ட்ரீட்மென்ட் சூப்பர்வைசர் பணிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் டிபி ஹெல்த் விசிட்டர் பணிக்கு 2 இடங்களும், மிட் லெவல் ஹெல்த் ப்ரொவைடர் பணிக்கு 2 இடங்களும் உள்ளன. இதுதவிர அலுவலகப் பணியான டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஒரு இடமும், கிளீனர் பணிக்கு ஒரு இடமும் என மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி விவரங்கள்

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குவாலிட்டி மேனேஜர் பணிக்கு எம்பிபிஎஸ், பல் மருத்துவம் அல்லது நர்ஸிங் முடித்தவர்கள் மற்றும் மருத்துவ நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மிட் லெவல் ஹெல்த் ப்ரொவைடர் பணிக்கு செவிலியர் பட்டயப்படிப்பு அல்லது பி.எஸ்சி நர்ஸிங் முடித்திருக்க வேண்டும்.

சாதாரண பட்டதாரிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சீனியர் ட்ரீட்மென்ட் சூப்பர்வைசர் மற்றும் டிபி ஹெல்த் விசிட்டர் பணிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் அல்லது சமூகப் பணி சார்ந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்குக் கணினி சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் அவசியம்.

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கிளீனர் தகுதி

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு கணினி அறிவியல் பிரிவில் டிகிரி முடித்தவர்கள் அல்லது ஏதேனும் ஒரு டிகிரியுடன் கணினி டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மிகவும் குறைவான கல்வித் தகுதியாக கிளீனர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம், ஆனால் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். எனவே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கும் இங்கு வாய்ப்பு காத்திருக்கிறது.

சம்பளம் மற்றும் வயது வரம்பு

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்குப் பதவியைப் பொறுத்துச் சம்பளம் மாறுபடும். குவாலிட்டி மேனேஜர் பணிக்கு மாதம் 40,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். சீனியர் ட்ரீட்மென்ட் சூப்பர்வைசர் பணிக்கு 19,800 ரூபாயும், மிட் லெவல் ஹெல்த் ப்ரொவைடர் பணிக்கு 18,000 ரூபாயும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிபி ஹெல்த் விசிட்டர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகளுக்கு மாதம் 13,500 ரூபாயும், கிளீனர் பணிக்கு 8,500 ரூபாயும் வழங்கப்படும். வயது வரம்பைப் பொறுத்தவரை மிட் லெவல் ஹெல்த் ப்ரொவைடர் மற்றும் டேட்டா என்ட்ரி பணிக்கு 35 வயதுக்குள்ளும், மற்ற பணிகளுக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது. தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் திருநெல்வேலி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tirunelveli.nic.in என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

DHS Thirunelveli Recruitment 2025
DHS Thirunelveli Recruitment 2025

விண்ணப்பிக்கக் கடைசி தேதி 09.12.2025 ஆகும். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification: 

Apply Link:

For More Job Info:

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *