TNRD Sivagangai Recruitment 2025: தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை தேடும் சிவகங்கை மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெறும் எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் இந்த அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இது ஒரு நிரந்தர அரசு பணியாகும். எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
| கருடா TNPSC Academy Group 2 & 4 Online Class New Batch தொடங்க உள்ளது. வகுப்பில் இணைய தொடர்புக்கு - 9787968176 |
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
பணியிட விவரங்கள் மற்றும் சம்பளம்
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணி காலியாக உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது. எண்ணிக்கை குறைவாக உள்ளதே என்று நினைக்க வேண்டாம்.
பெரும்பாலானோர் இப்படி நினைத்து விண்ணப்பிக்காமல் விட்டுவிடுவார்கள். எனவே முயற்சி செய்பவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊதியக் குழுவின் படி மாதம் 15,700 ரூபாய் முதல் 58,100 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.
இதுதவிர இதர அரசுப் படிகளும் கிடைக்கும். ஆரம்பத்திலேயே ஒரு நல்ல சம்பளத்துடன் உள்ளூரிலேயே அரசு வேலை என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.
கல்வி மற்றும் வயதுத் தகுதி
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. அத்துடன் தமிழில் பிழையில்லாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பணி என்பதால் விண்ணப்பதாரர்களுக்கு மிதிவண்டி (Cycle) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமான தகுதியாகும். வயது வரம்பைப் பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சமாக 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை மற்றும் கட்டணம்
இந்த வேலைவாய்ப்பிற்கு எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு (Interview) மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் சான்றிதழ்கள் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 50 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இந்தத் தொகையை Commissioner, Panchayat Union, Singampunari என்ற பெயரில் வங்கி வரைவோலையாக (Demand Draft – DD) எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேரடி அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான கல்வி மற்றும் சாதிச் சான்றிதழ் நகல்களை இணைத்து, 50 ரூபாய்க்கான டிடி (DD) யையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி ஆணையாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம் – 630502 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி தேதி 28.11.2025 ஆகும்.

கால அவகாசம் மிகக் குறைவாக இருப்பதால் இன்றே விண்ணப்பத்தை அஞ்சலில் விரைவு அஞ்சல் (Speed Post) மூலம் அனுப்புவது சிறந்தது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Official Notification:
Apply Link:
For More Job Info:





