CUTN Thiruvarur Recruitment 2026: திருவாரூர் மற்றும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவாரூரில் இயங்கி வரும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (Central University of Tamil Nadu – CUTN) காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களை (Non-Teaching Posts) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கும் வகையில் பல்வேறு காலியிடங்கள் உள்ளன. இது ஒரு நிரந்தர மத்திய அரசு வேலையாகும்.
| கருடா TNPSC Academy Group 2 & 4 Online Class New Batch தொடங்க உள்ளது. வகுப்பில் இணைய தொடர்புக்கு - 9787968176 |
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன வேலை?
பல்கலைக்கழக நிர்வாகத்தில் மொத்தம் 13 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பணி வாரியான விவரங்கள் இதோ:
-
மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS):
-
காலியிடம்: 1
-
தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.
-
வயது: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
-
-
லோயர் டிவிஷன் கிளார்க் (LDC – எழுத்தர்):
-
காலியிடங்கள்: 5 (அதிகபட்ச இடங்கள் இதில் தான் உள்ளன).
-
தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி (Degree) முடித்திருக்க வேண்டும். கூடவே ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு (Typing) மற்றும் கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
-
வயது: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
-
-
அப்பர் டிவிஷன் கிளார்க் (UDC):
-
காலியிடங்கள்: 2
-
தகுதி: டிகிரி தேர்ச்சியுடன் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
-
-
பெர்சனல் அசிஸ்டென்ட் (Personal Assistant):
-
காலியிடம்: 1
-
தகுதி: இளங்கலைப் பட்டத்துடன் சுருக்கெழுத்து (Shorthand) தெரிந்திருக்க வேண்டும்.
-
வயது: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
-
-
லேபரட்டரி அசிஸ்டென்ட் (Laboratory Assistant):
-
தகுதி: இயற்பியல், வேதியியல் அல்லது நுண்ணுயிரியல் (Microbiology) பாடத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
-
பொறியியல் படித்தவர்களுக்கான வாய்ப்பு
கணினித் துறையில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (Senior Technical Assistant) பணிக்கு 1 காலியிடம் உள்ளது. இதற்கு பி.இ/பி.டெக் (Computer Science/ ECE) அல்லது எம்.சி.ஏ/எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுதவிர, செமி ப்ரொபஷனல் அசிஸ்டென்ட் மற்றும் இந்தி டைப்பிஸ்ட் பணியிடங்களும் காலியாக உள்ளன.
சம்பளம் மற்றும் வயது தளர்வு
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மத்திய அரசு 7-வது ஊதியக் குழுவின் படி சம்பளம் வழங்கப்படும். எம்டிஎஸ் பணிக்கு நிலை-1 ஊதியமும், அதிகபட்சமாகச் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு நிலை-6 ஊதியமும் வழங்கப்படும்.
வயது தளர்வு: மத்திய அரசு விதிகளின்படி ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cutn.ac.in/ என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
-
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 21.01.2026 (ஜனவரி 21).

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மற்றும் திறன் தேர்வு (Skill Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டிலேயே மத்திய அரசுப் வேலையில் சேர விரும்பும் இளைஞர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
Official Notification:
Apply Link:
For More Job Info:





