KVS Recruitment 2025
KVS Recruitment 2025

அரசுப் பள்ளிகளில் 14967 வேலை! 10வது பாஸ், 12வது, டிகிரி படித்தவர்களுக்கு பிரம்மாண்ட வாய்ப்பு! KVS Recruitment 2025

KVS Recruitment 2025: மத்திய அரசுப் பள்ளியில் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா சங்கதன் (Kendriya Vidyalaya Sangathan – KVS) நிறுவனத்தில், நாடு முழுவதும் காலியாக உள்ள 14,967 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான மாபெரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

KVS Recruitment 2025
KVS Recruitment 2025

10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான MTS, லேப் அட்டெண்டன்ட் பணியிடங்கள் முதல், 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான LDC (JSA), ஸ்டெனோகிராஃபர் பணிகள் மற்றும் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் (PGT, TGT, PRT), அதிகாரி (Officer) பணிகள் வரை பலதரப்பட்ட வாய்ப்புகள் இதில் அடங்கியுள்ளன.

கருடா TNPSC Academy Group 2 & 4 Online Class New Batch தொடங்க உள்ளது. வகுப்பில் இணைய தொடர்புக்கு - 9787968176

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS)

  • வேலை வகை: மத்திய அரசு வேலை

  • மொத்த காலியிடங்கள்: 14,967

  • பணியிடம்: இந்தியா முழுவதும்

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 4, 2025

சம்பளம் மற்றும் பதவிகள்

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்குப் பதவிக்கு ஏற்ப மாதம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும்.

  • ஆசிரியர் பதவிகள் (Teachers): Principal, Vice-Principal, PGTs (முதுநிலை பட்டதாரி ஆசிரியர்), TGTs (பட்டதாரி ஆசிரியர்), Librarian, Primary Teachers (ஆரம்பப் பள்ளி ஆசிரியர்).

  • அதிகாரி பதவிகள் (Officers): Assistant Commissioner, Administrative Officer, Finance Officer, Assistant Engineer, Assistant Section Officer, Junior Translator.

  • 12ஆம் வகுப்பு தகுதிப் பணிகள்: Senior Secretariat Assistant, Stenographer, Junior Secretariat Assistant (JSA/LDC).

  • 10ஆம் வகுப்பு தகுதிப் பணிகள்: Lab Attendant, Multi Tasking Staff (MTS).

கல்வித் தகுதி

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ITI, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree), B.E/B.Tech, முதுகலை பட்டம், B.Ed. எனப் பல்வேறு தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் பதவிக்கு ஏற்ப குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) 10-15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நிலை I மற்றும் நிலை II (Tier I & II Exam) எழுத்துத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். LDC, Stenographer போன்ற பதவிகளுக்கு தட்டச்சுத் தேர்வு / திறன் தேர்வும் (Skill Test) நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம் (கவனிக்கவும்)

விண்ணப்பக் கட்டணம் பதவிக்கு ஏற்ப மாறுபடும்.

  • SSA, JSA, MTS, Lab Attendant பதவிகளுக்கு: General / OBC / EWS பிரிவினருக்கு ரூ.1700/-. (SC/ST/PH/ESM பிரிவினருக்கு ரூ.500/-).

  • PGT, TGT, PRT, Librarian பதவிகளுக்கு: General / OBC / EWS பிரிவினருக்கு ரூ.2000/-. (SC/ST/PH/ESM பிரிவினருக்கு ரூ.500/-).

  • Principal, Vice Principal பதவிகளுக்கு: General / OBC / EWS பிரிவினருக்கு ரூ.2800/-. (SC/ST/PH/ESM பிரிவினருக்கு ரூ.500/-).

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? (கடைசி நாள்: 04.12.2025)

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

  1. KVS-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kvsangathan.nic.in/ என்பதற்குச் செல்லவும்.

  2. விண்ணப்பம் தொடங்கும் நாளான நவம்பர் 14, 2025 அன்று, முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Announcements’ அல்லது ‘Recruitment’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

  3. விண்ணப்பிக்க விரும்பும் பதவிக்குரிய அறிவிப்பைப் படித்துவிட்டு, ‘Apply Online’ என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. முதலில் பதிவு (Register) செய்து, உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.

  5. தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.

  6. இறுதியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, அதன் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

KVS Recruitment 2025
KVS Recruitment 2025

மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்ற இது ஒரு பொன்னான வாய்ப்பு. 14,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதால், தகுதியுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பை தவறவிடாமல், கடைசி தேதிக்கு முன்னதாகவே விண்ணப்பிக்கவும்.

Official Notification: 

Apply Link:

For More Job Info:

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *