TN School College Rain Holiday Tomorrow: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயல் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி நாளை (02.12.2025) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
| கருடா TNPSC Academy Group 2 & 4 Online Class New Batch தொடங்க உள்ளது. வகுப்பில் இணைய தொடர்புக்கு - 9787968176 |
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
சென்னை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (டிசம்பர் 2) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்திலும் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சினேகா அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கனமழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆக மொத்தம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம் மற்றும் ரெட் அலர்ட்
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தற்போது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இது சென்னைக்குக் கிழக்கு திசையில் மிக அருகில் அதாவது சுமார் 30 முதல் 40 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாகச் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் (Red Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலையில் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், மழை இடைவிடாமல் பெய்து வருவதால் தற்போது ரெட் அலர்ட் ஆக மாற்றப்பட்டுள்ளது.
அடுத்த சில மணி நேரங்களில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் தாக்கம் காரணமாகத் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாளை முதல் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் கரையை நெருங்கி வருவதால் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும். எனவே பொதுமக்கள் கடற்கரைக்குப் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
பிற மாவட்ட நிலவரம்
தற்போதைக்கு நான்கு மாவட்டங்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் மழையின் தீவிரத்தைப் பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை குறித்து முடிவு செய்வார்கள். இது குறித்த அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை காலை வெளியாகலாம்.

எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ செய்திகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கனமழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
For More Job Info:





