SSC GD Constable Recruitment 2025: இந்தியாவில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் எனப்படும் எஸ்எஸ்சி (SSC) தனது வருடாந்திர கான்ஸ்டபிள் ஜிடி (Constable GD) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த முறை சுமார் 25,487 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் இந்த வேலைக்கு போட்டி போடலாம். மத்திய அரசு வேலை என்பதால் பணிப் பாதுகாப்பு மற்றும் நிரந்தர வருமானம் உறுதி.
| கருடா TNPSC Academy Group 2 & 4 Online Class New Batch தொடங்க உள்ளது. வகுப்பில் இணைய தொடர்புக்கு - 9787968176 |
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
பணியிட விவரங்கள் மற்றும் முக்கியத்துவம்
எஸ்எஸ்சி கான்ஸ்டபிள் ஜிடி தேர்வு என்பது மத்திய ஆயுதக் காவல் படைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது. இதில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), எஸ்எஸ்பி (SSB) மற்றும் அசாம் ரைபிள்ஸ் போன்ற பல்வேறு படைகளில் காலியாக உள்ள 25,487 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். தமிழக மாணவர்களுக்குத் தமிழ் மொழியிலேயே தேர்வு எழுதும் வசதியும் உள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு
இந்த வேலைவாய்ப்பின் மிகப்பெரிய சிறப்பம்சமே இதன் கல்வித் தகுதிதான். அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. வேறு எந்த முன் அனுபவமும் தேவையில்லை.
வயது வரம்பைப் பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 23 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும் மத்திய அரசு விதிகளின்படி ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி மற்றும் எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் மற்றும் இதர சலுகைகள்
தேர்வு செய்யப்படும் கான்ஸ்டபிள்களுக்கு மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவின் படி மிகச்சிறந்த சம்பளம் வழங்கப்படும். பணியில் சேரும்போதே அடிப்படை சம்பளமாக மாதம் 21,700 ரூபாய் முதல் 69,100 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது அடிப்படை சம்பளம் மட்டுமே. இதனுடன் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, ரேஷன் படி மற்றும் ரிஸ்க் அலவன்ஸ் எனப் பல்வேறு படிகள் சேர்க்கப்படும்போது மாதம் கையில் 30,000 ரூபாய்க்கும் அதிகமான சம்பளம் கிடைக்கும்.
தேர்வு முறை மற்றும் உடற்தகுதி
விண்ணப்பதாரர்கள் மூன்று கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள். முதற்கட்டமாக கணினி வழித் தேர்வு (Computer Based Examination) நடைபெறும். இதில் பொது அறிவு, கணிதம், ரீசனிங் மற்றும் மொழிப்பாடம் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தக்கட்டமாக உடற்தகுதித் தேர்விற்கு (Physical Test) அழைக்கப்படுவார்கள். இதில் ஓட்டம் மற்றும் உடல்தகுதி சோதிக்கப்படும். இறுதியாக மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கப் பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி ஆண்கள் மட்டும் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் முற்றிலும் கிடையாது. இவர்கள் இலவசமாகவே விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் எஸ்எஸ்சி இணையதளமான ssc.gov.in என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கத் தொடங்கிய நாள் 01.12.2025 ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 31.12.2025. கடைசி நேரத்தில் சர்வர் வேகம் குறைய வாய்ப்புள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சீருடைப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Official Notification:
Apply Link:
For More Job Info:





