MRB Tamil Nadu Recruitment 2025: மருத்துவத் துறையில் அரசு வேலைக்காகக் காத்திருக்கும் டிப்ளமோ பட்டதாரிகளுக்கு ஒரு சூப்பர் செய்தி! தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (Medical Services Recruitment Board – MRB), பல் சுகாதார நிபுணர் (Dental Hygienist) பதவிக்கான நேரடி நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 39 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பின் மிகப்பெரிய சிறப்பம்சமே, இதற்கு எந்தவித எழுத்துத் தேர்வும் அல்லது நேர்முகத் தேர்வும் கிடையாது. உங்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படுவீர்கள்! தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 2, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
| கருடா TNPSC Academy Group 2 & 4 Online Class New Batch தொடங்க உள்ளது. வகுப்பில் இணைய தொடர்புக்கு - 9787968176 |
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
முக்கிய விவரங்கள்
- துறை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB), தமிழ்நாடு
- பதவி: பல் சுகாதார நிபுணர் (Dental Hygienist)
- மொத்த காலியிடங்கள்: 39
- சம்பளம்: ரூ. 35,400 – 1,30,400/- (Level 11)
- தேர்வு முறை: மதிப்பெண் அடிப்படையில் மட்டும் (தேர்வு இல்லை)
- கடைசி தேதி: 02.11.2025 (விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளன!)
தேவைப்படும் தகுதிகள் என்ன?
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கக் கீழ்க்கண்ட தகுதிகள் அவசியம்:
- கல்வித் தகுதி:
- மேல்நிலைக் கல்வியில் (+2) உயிரியல் அல்லது விலங்கியல் மற்றும் தாவரவியல் பாடங்களை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Diploma in Dental Hygienist படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு: (01.07.2025 அன்று)
- பொதுப் பிரிவினர் (OC): 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- SC / ST / SCA / MBC(DNC) / BC / BCM பிரிவினர்: உச்ச வயது வரம்பு இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை (தேர்வு கிடையாது!)
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு எழுதத் தேவையில்லை. அவர்களின் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மதிப்பெண்கள் கீழ்க்கண்ட விகிதத்தில் கணக்கிடப்படும்:
- 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள்: 20%
- 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள்: 30%
- டிப்ளமோ (Dental Hygienist) மதிப்பெண்கள்: 50%
இந்த வெயிட்டேஜ் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பிறகு பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
- பொதுப் பிரிவினர் (OC): ரூ. 600/-
- SC / SCA / ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwD): ரூ. 300/-
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? (கடைசி நாள்: 02.11.2025)
விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mrb.tn.gov.in என்பதற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Online Registration’ பகுதிக்குச் சென்று, “Dental Hygienist” பதவிக்கான அறிவிப்பைக் கிளிக் செய்யவும்.
- முழுமையான விவரங்களைப் படித்துவிட்டு, ‘Register / Login’ செய்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
- தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
- இறுதியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, அதன் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில், தேர்வு இல்லாமல், உங்கள் கல்வி மதிப்பெண்களின் அடிப்படையிலேயே வேலை பெற இது ஒரு பொன்னான வாய்ப்பு. தகுதியுள்ளவர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்கவும்.
Official Notification:
Apply Link:
For More Job Info:





