STPI Recruitment 2025: மத்திய அரசு வேலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஃப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆஃப் இந்தியா எனப்படும் எஸ்டிபிஐ (STPI) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான இந்த புதிய அறிவிப்பில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுப் பணியாளர் விதிகளின்படி மிகச்சிறந்த சம்பளம் மற்றும் பணிப் பாதுகாப்புடன் கூடிய இந்த வேலைவாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
| கருடா TNPSC Academy Group 2 & 4 Online Class New Batch தொடங்க உள்ளது. வகுப்பில் இணைய தொடர்புக்கு - 9787968176 |
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
பணியிட விவரங்கள் மற்றும் பதவிகள்
நாடு முழுவதும் உள்ள எஸ்டிபிஐ மையங்களில் மொத்தம் 24 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவை தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயர் பதவியான மெம்பர் டெக்னிக்கல் ஸ்டாஃப் பணிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நிர்வாகப் பிரிவில் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீசர் பணிக்கு 3 இடங்களும், பல்வேறு நிலைகளில் உள்ள உதவியாளர் (Assistant) பணிக்கு 6 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு 8 இடங்கள் உள்ளன. குறிப்பாகக் குறைந்தபட்ச கல்வித் தகுதியைக் கொண்ட ஆபீஸ் அட்டென்டென்ட் (Office Attendant) பணிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி விவரங்கள்
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மெம்பர் டெக்னிக்கல் ஸ்டாஃப் பணிக்கு எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐடி துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மெம்பர் டெக்னிக்கல் சப்போர்ட் ஸ்டாஃப் பணிகளுக்கு டிப்ளமோ (Diploma) அல்லது பி.எஸ்சி கணினி அறிவியல் அல்லது ஐடிஐ (ITI) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாக அதிகாரி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி (Any Degree) முடித்திருந்தால் போதும். ஆனால் சம்மந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் தேவைப்படும். ஆபீஸ் அட்டென்டென்ட் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
ஊதியம் மற்றும் வயது வரம்பு
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவின் படி மிகச்சிறந்த சம்பளம் வழங்கப்படும். மெம்பர் டெக்னிக்கல் ஸ்டாஃப் பணிக்கு மாதம் 56,100 ரூபாய் முதல் 1,77,500 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். உதவியாளர் மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்கு மாதம் 29,200 ரூபாய் முதல் 1,12,400 ரூபாய் வரை கிடைக்கும்.
ஆபீஸ் அட்டென்டென்ட் பணிக்கு மாதம் 18,000 ரூபாய் முதல் 56,900 ரூபாய் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பைப் பொறுத்தவரை பதவியைப் பொறுத்து 30 வயது முதல் 40 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் சலுகைகள்
உயர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி ஆண்கள் 1000 ரூபாயும், மற்ற பதவிகளுக்கு 500 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இருப்பினும் பெண்கள், எஸ்சி (SC), எஸ்டி (ST) மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் முற்றிலும் கிடையாது. இவர்கள் இலவசமாகவே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எஸ்டிபிஐ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான stpi.in என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கத் தொடங்கிய நாள் 29.11.2025 ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 12.01.2026. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை கால அவகாசம் உள்ளது.

இருப்பினும் கடைசி நேரத்தில் ஏற்படும் சர்வர் பிரச்சனைகளைத் தவிர்க்க ஆர்வமுள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிப்பது சிறந்தது. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
Official Notification:
Apply Link:
For More Job Info:





