Chennai DSWO Govt Jobs 2025
Chennai DSWO Govt Jobs 2025

சென்னையில் 10வது முதல் டிகிரி முடித்தவர்களுக்கு தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க – Chennai DSWO Govt Jobs 2025

Chennai DSWO Govt Jobs 2025: சென்னையில் அரசு வேலை தேடும் பெண்களுக்கு ஒரு சூப்பர் செய்தி! தமிழ்நாடு அரசின் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் (District Social Welfare Office) கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) 65 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Chennai DSWO Govt Jobs 2025
Chennai DSWO Govt Jobs 2025

இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டுமே! விண்ணப்பக் கட்டணமும் இல்லை. இது சென்னையைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமான பிரத்யேக வாய்ப்பாகும். 10ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் முதுகலைப் பட்டதாரிகள் வரை பலருக்கும் ஏற்ற பணிகள் உள்ளன.

கருடா TNPSC Academy Group 2 & 4 Online Class New Batch தொடங்க உள்ளது. வகுப்பில் இணைய தொடர்புக்கு - 9787968176

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

முக்கிய விவரங்கள்

நிறுவனம்: மாவட்ட சமூக நல அலுவலகம், சென்னை (ஒருங்கிணைந்த சேவை மையம்) வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை (ஒப்பந்த அடிப்படை) மொத்த காலியிடங்கள்: 65 பணியிடம்: சென்னை (உள்ளூர்வாசிகள் மட்டும்) விண்ணப்பதாரர்கள்: பெண்கள் மட்டும் தேர்வு முறை: நேர்காணல் மட்டும் (தேர்வு இல்லை) விண்ணப்பக் கட்டணம்: இல்லை கடைசி தேதி: நவம்பர் 21, 2025

பணியிடங்களின் முழு விவரம்

பதவி 1: Centre Administrator (5 இடங்கள்) சம்பளம்: மாதம் ரூ.35,000/- தகுதி: சமூகப் பணி / உளவியலில் முதுகலை பட்டம் (Masters in Social Work/Psychology). 4 வருட பணி அனுபவம் மற்றும் 1 வருட கவுன்சிலிங் அனுபவம். ஓட்டுநர் உரிமம் அவசியம்.

பதவி 2: Senior Counselor (5 இடங்கள்) சம்பளம்: மாதம் ரூ.22,000/- தகுதி: முதுகலை பட்டம் (M.S.W / M.Sc Counselling Psychology) மற்றும் 2 வருட பணி அனுபவம்.

பதவி 3: Case worker (30 இடங்கள்) சம்பளம்: மாதம் ரூ.18,000/- தகுதி: சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree in Social Work). 1 வருட பணி அனுபவம். 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் அவசியம்.

பதவி 4: IT Administrator (5 இடங்கள்) சம்பளம்: மாதம் ரூ.20,000/- தகுதி: B.Tech/B.Sc மற்றும் கணினி/IT-ல் டிப்ளமோ. 3 வருட தொழில்நுட்ப அனுபவம்.

பதவி 5: Security Guard (10 இடங்கள்) சம்பளம்: மாதம் ரூ.12,000/- தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணியில் அனுபவம்.

பதவி 6: Multi Purpose Helper (10 இடங்கள்) சம்பளம்: மாதம் ரூ.10,000/- தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. சமையல் மற்றும் அலுவலக பராமரிப்பு தெரிந்திருக்க வேண்டும்.

முக்கிய நிபந்தனைகள்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் சென்னையில் வசிக்கும் பெண்களாக (Local Residents) மட்டுமே இருக்க வேண்டும். மேலும், Security Guard, Helper, Case Worker போன்ற பல பணிகளுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் (Rotational Basis) பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி? (கடைசி நாள்: 21.11.2025)

படி 1: சென்னை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையளமான https://chennai.nic.in/ என்பதற்குச் செல்லவும்.

படி 2: அங்குள்ள “Notices” -> “Recruitment” பகுதிக்குச் சென்று, இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தைப் (Application Form) பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

படி 3: படிவத்தை பிரிண்ட் எடுத்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யவும்.

படி 4: பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், உங்கள் கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.

படி 5: தயார் செய்த விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கோ (Email) அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை – 600 001.

Chennai DSWO Govt Jobs 2025
Chennai DSWO Govt Jobs 2025

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் முதுகலைப் பட்டதாரிகள் வரை, பல பெண்களுக்கு சென்னையில், தேர்வு இல்லாமல், நேர்காணல் மூலம் அரசுத் துறையில் வேலை பெற இது ஒரு பொன்னான வாய்ப்பு. தகுதியுள்ளவர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

Official Notification: 

Apply Link:

For More Job Info:

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *